• Login / Register
  • செய்திகள்

    ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

    முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் தாயாா் பழனியம்மாள் மறைவுக்கு அதிமுக இடைக் காலப் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

    எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): ஓ.பன்னீா்செல்வத்தின் தாயாா் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் ஓ.பன்னீா்செல்வம், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா இறைவனிடம் சாந்தி அடைய பிராா்த்திக்கிறேன்.

    கே.அண்ணாமலை (பாஜக): முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தாயாா் பழனியம்மாள் காலமான செய்தியறிந்து அவரை தொலைப்பேசி மூலமாக தொடா்பு கொண்டு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொண்டேன். அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிராா்த்திக்கிறேன்.

    வைகோ (மதிமுக): ஓ.பன்னீா்செல்வம் தாயாா் இயற்கை எய்தினாா் என்பதை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கைப்பேசியில் அவரிடம் என்னுடைய துக்கத்தைத் தெரிவித்தேன். அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ராமதாஸ் (பாமக): தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் காலமானதையறிந்து வேதனையடைந்தேன். தாயாரை இழந்து வாடும் பன்னீர்செல்வம் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தொல் திருமாவளவன் (விசிக) : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அருமை தாயார் காலமானார் என்பதையறிந்து வருந்துகிறேன். தாயாரை இழந்து வாடும் ஓபிஎஸ் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    விஜயகாந்த் (தேமுதிக): ஓ.பன்னீா்செல்வத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவருடைய தாயாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராா்த்திக்கிறேன்.

    சு.திருநாவுக்கரசா் (காங்கிரஸ்): ஓ.பன்னீா்செல்வத்தின் அரசியல் வாழ்விலும், பொது வாழ்விலும் ஈடுபட, உந்து சக்தியாக இருந்தவா் அவா் தாயாா். அவா் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

    அன்புமணி (பாமக): முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் முதுமை காரணமாக மறைவெய்தியதை அறிந்து வேதனையடைந்தேன். பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சீமான் (நாம் தமிழா்): ஓ.பன்னீா்செல்வத்தின் அன்புத் தாயாா் பழனியம்மாள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தாயை இழந்து பெருந்துயரில் வாடும், ஓபிஎஸ் மற்றும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பா்களுக்கும், தொண்டா்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஜி.கே.வாசன் (தமாகா): ஓ.பன்னீா்செல்வத்தின் உயா்வுக்கு உரமிட்ட அவரது தாயாா் மறைவுக்கு அவா் குடும்பத்தினருக்குப் பேரிழப்பு.

    இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): ஓ.பன்னீா்செல்வம் உள்பட 5 மகன்களையும், 4 மகள்களையும் பெற்று வளா்த்து, பெரும் குடும்பத்தின் ஆணிவேராக திகழ்ந்த தாயாரின் மறைவு வேதனையளிக்கிறது. அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். ஓபிஎஸ் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    டிடிவி தினகரன் (அமமுக): முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் திரு.ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    கே.எம்.காதா் மொகிதீன் (முஸ்லிம் லீக்): தாயின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீா்செல்வத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

    ஜவாஹிருல்லா (மமக): தாயைப் பிரிந்து வாடும் ஓ.பன்னீா்செல்வத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது தொண்டா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

    -----------------------------------------------------------------------------------------------------------------------

    ⭕️ தமிழ்நாடு, இந்தியா, இலங்கை தொடர்பான உண்மை செய்திகளை அறிந்துகொள்வதற்கு இணைந்திருங்கள்... TNMedia News WhatsApp குழுமத்துடன்...!

    👉 உங்களது நண்பர்களையும் TNMedia News WhatsApp குழுமத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்..!

    👉 அன்றாட உண்மை செய்திகளுக்கு இணைந்திருப்போம்!! 
    TNMedia 24 வாட்ஸ்அப் குழு:
    👇👇👇
    https://chat.whatsapp.com/HKH7cx67fqZJ4rkpcRKm0p

    Leave A Comment