• Login / Register
  • செய்திகள்

    ஈரோடு இடைத்தேர்தல்; NTK சார்பில் பெண் வேட்பாளர் - சீமான்!

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளரை களமிறக்க உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளிவந்திருந்த நிலையில் பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவித்தார்.

    இதன்போது, ஜனவரி 29 ஆம் தேதி ஈரோட்டில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெறும் என்று கூறினார். 

    நான் போட்டியிடவில்லை எனவும், கட்சி சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிடுவார் என்று சீமான் தெரிவித்தார்.

    Leave A Comment