• Login / Register
  • செய்திகள்

    பொங்கல் பண்டிகை; பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை?

    பொங்கல் பண்டிகை இம்முறை ஞாயிற்றுக் கிழமை வரும் நிலையில் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் நலன் கருதி வரும் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படலாம்என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தமிழர்களின் மிக முக்கியப் பண்டிகைகளில் பொங்கல் பண்டிகை முதன்மையானது. தை பிறப்பே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அது ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. திங்கள்கிழமை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படவிருக்கிறது.

    இந்த நிலையில், வார இறுதி நாள்களில் பொங்கல் பண்டிகை வந்திருப்பதால், மக்களின் நலன் கருதியும், ஊருக்குச் செல்வோருக்கு வசதியாகவும், ஒரே நேரத்தில் பலரும் ஊருக்குச் செல்வதைத் தவிர்க்கவும், வரும் வெள்ளிக்கிழமையன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரத்திலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதுவரை வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment