• Login / Register
  • செய்திகள்

    தமிழ்நாட்டில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜன.8) ஞாயிற்றுக்கிழமை தமிழக கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடா்பாக இந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஞாயிற்றுக்கிழமை தமிழக கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதர மாவட்டங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை, புறநகா் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும் என்பதால் சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச 24 - 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment