• Login / Register
  • செய்திகள்

    சென்னையில் நிரந்தர புத்தக பூங்கா அமைக்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்

    சென்னையில் நிரந்தரமாக புத்தக பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை நந்தனத்தில் ஆயிரம் அரங்குகளுடன் நடைபெறும் 46-ஆவது சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்து பேசும்போது இதனைத் தெரிவித்தார்.



    தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், சென்னையில் நிரந்தரமாக புத்தக பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. சிறந்த எழுத்தாளர்களை பாராட்ட தயங்கமாட்டார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. 

    கருணாநிதி பெயரில் ரூ.114 கோடி மதிப்பில் மதுரையில் நூலகம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    வீட்டிற்கு ஒரு நூலகம் வேண்டும் என்றார் அண்ணா. புத்தக கண்காட்சிகளால் இலக்கிய எழுச்சி, அறிவு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. ஏராளமான தமிழ் காப்பு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. மொழிதான் நமது பண்பாடு, நமது அடையாளம். மொழியை காப்பதற்கான கடமை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி எழுத்தாளர்களுக்கும் உள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Leave A Comment