உலங்கு வானூர்தி மீது ஏவுகணைத் தாக்குதல்? - ஈரான் பாதுகாப்பு பிரிவு தீவிர விசாரணை!
ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த உலங்கு வானூர்தி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் பயணித்த ஹெலிகொப்டர் கடந்த மே-19 ஆம் திகதி விபத்திற்குள்ளாகியுள்ளகியிருந்தது.
அசர்பைஜான் மற்றும் ஈரானின் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் திறப்பு விழாவிற்காக ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் சென்று மீண்டும் திரும்பும் வழியில் இந்த ஹெலிகொப்டர் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி முற்றாக எரிவடைந்து அழிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதில் பயணித்த ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட 9 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது உடலங்களும் நேற்று முன்தினம் (20) காலை அங்கிருந்து மீட்கப்பட்டிருந்தன.
குறித்த சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் உலகளாவிய ரீதியாக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி பயணித்த பெல் 212 ரக ஹெலிகாப்டர் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக விபத்து தொடர்பில் ஈரான் பாதுகாப்பு படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏவுகணைத் தாக்குதலால் ஹெலிகாப்டர் முற்றாக எரித்து அழிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இஸ்ரேலின் பலஸ்தீன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தற்போது தாக்குதலில் ஈடுபடும் ஹூதி படைக்கு ஆதரவு வழங்கியமை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்டவை காரணமாக, மேற்குலகின் விமர்சனத்திற்கு உள்ளான ஈரான் ஜனாதிபதிக்கு கடும் உயிர் அச்சுறுத்தல் இருந்து வந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் இஸ்ரேல் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்தால், இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கற்பனைக்கு அப்பாற்பட்டு பதிலடி கொடுப்போம் என்று ஈரானின் உச்ச தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியிhகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Leave A Comment