இந்திய மாணவர் சுட்டுக்கொலை: கனடாவில் அதிர்ச்சி
அமெரிக்காவை தொடர்ந்து கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாவட்டம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்த சிராஜ் அந்தில் (24) என்ற இந்திய மாணவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு உயர்படிப்புக்காக கனடா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் எம்.பி.ஏ. படித்து முடித்த பின் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சிராஜ் அந்தில் கனடா நாட்டின் வான்கூர் நகரில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது சொகுசு காரில் வெளியில் சென்றார்.
இந்த நிலையில் அவர் காருக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக கனடா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்கா, கனடா போன்ற பிற நாடுகளில் இந்திய மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவது அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Leave A Comment