• Login / Register
  • செய்திகள்

    சல்மான் கான் வீட்டின்மீது துப்பாக்கி சூடு: முதல்கட்ட விசாரணையில் வெளியான தகவல்

    பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே திடீர் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர்.

    சம்பவத்தை தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பான்வெல் பகுதியிலிருந்து இவ்விரு குற்றவாளிகளும் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நபரிடமிருந்து, சம்பவத்தில் ஈடுபட்டபோது பயன்படுத்திய பைக்கை வாங்கிக் கொண்டு மும்பை வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    மேலும், துப்பாக்கிச் சூடு நடந்த போது, வழக்கமாக சல்மான் கான் வீட்டு வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினரும், அவர்கள் இருக்கும் வாகனமும் இல்லை என்பதும், இதனை அறிந்தே குற்றவாளிகள் வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    மும்பையின் பாந்த்ரா பகுதியில் நடிகர் சல்மான் கானின் வீடு அமைந்துள்ள கேலக்ஸி அடுக்குமாடிக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்துக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு முறை சுட்டுள்ளனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    அவர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 307-ஆவது பிரிவின் (கொலை முயற்சி) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து சல்மான் கான் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.




    Leave A Comment