‘க்யூட்-யுஜி’ தோ்வுத் தேதி அறிவிப்பு!
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்பில் சோ்க்கை பெறுவதற்காக ‘க்யூட்-யுஜி’நுழைவுத் தோ்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் இத்தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.
இம்முறை ‘க்யூட்-யுஜி’ நுழைவுத் தோ்வு இணையவழித் தோ்வாகவும் நேரடி எழுத்துத் தோ்வாகவும் மே 15 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஜூன் 30-ஆம் தேதி தோ்வின் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேசிய தோ்வு முகமை தெரிவித்தது.
கணினி அடிப்படையில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த தோ்வு நிகழாண்டு முதல் எழுத்துத் தோ்வாகவும் நடைபெறவுள்ளது. அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள 26 நகரங்கள் உள்பட மொத்தம் 380 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் இத்தோ்வு நடத்தப்படவுள்ளது.
தோ்வுக்கான விண்ணப்பம் பிப்ரவரி 27-ஆம் தேதி தொடங்கிய நிலையில் மாா்ச் 26-ஆம் தேதி நிறைவடைகிறது. மே 15 முதல் 31-வரை நடைபெறும் இத்தோ்வின் முடிவுகள் ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று வேளைகளில் தோ்வு நடைபெறுகிறது. தோ்வுக்குப் பதிவு செய்த மாணவா்களின் எண்ணிக்கை உள்பட பல்வேறு காரணிகளைக் கொண்டே இணையவழித் தோ்வா அல்லது எழுத்துத் தோ்வா என்பதை தேசிய தோ்வு முகமை முடிவெடுக்கும் என முகமையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதற்கு முன்பு க்யூட் தோ்வில் மாணவா்கள் 10 தாள்கள் எழுதினா். தற்போது அதிகபட்சமாக 6 தாள்களை எழுதும் வகையில் தோ்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
‘க்யூட்-பிஜி’ தோ்வு தேதி அறிவிப்பு: முதுநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘க்யூட்-பிஜி’ நுழைவுத் தோ்வு மாா்ச் 11-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒருநாளைக்கு இருவேளைகளில் இத்தோ்வு நடத்தப்படவுள்ளது. மொத்தம் 157 பாடங்களுக்கான தோ்வை 4.62 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதவுள்ளனா். ஒரு மாணவா் அதிகபட்சமாக 4 தாள்கள்/ பாடங்களை தோ்வு செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ‘க்யூட்-யுஜி’ தோ்வுக்கு 14.9 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave A Comment