• Login / Register
  • செய்திகள்

    மாா்ச் 11 முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!


    மாா்ச் 11ஆம் தேதி முதல் கோவை - பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேரம் மாற்றத்திற்குள்ளாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வந்தே பாரத் ரயில், கோவையில் இருந்து, காலை 7.25 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.50 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை அடையும்.

    மறுமாா்க்கத்தில், பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.45 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை அடையும். இந்த நேர மாற்றம் வரும் மாா்ச் 11ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, கோவை - கேஎஸ்ஆா் பெங்களூரு இடையேயான உதய் எக்ஸ்பிரஸ், புதன்கிழமை தவிர, இதர நாட்களில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் சேவையானது, வரும் மாா்ச் 5 ஆம் தேதி முதல் வாரத்தின் அனைத்தும் நாட்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


    Leave A Comment