• Login / Register
  • செய்திகள்

    சென்னையில் சாந்தன் காலமானார்!

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நிலையில் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் இன்று (28) புதன்கிழமை காலமானார்.

    திருச்சி சிறப்பு முகாமில் தனிமைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    உடல்நிலை பின்னடைவை சந்தித்திருந்த நிலையில் கோமா நிலைக்கு சென்ற சாந்தன் இன்று (28) புதன்கிழமை காலை 07.50 மணிக்கு உயிரிழந்திருப்பதாக சென்னை அரசு மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்திய உச்ச நீதிமன்றத்தினால் கடந்த 2022 நவம்பர் 11 ஆம் திகதி சாந்தன் உள்ளிட்ட ஆற பேரும் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் ஈழத்தமிழர்களான நால்வர் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சாந்தன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் திருச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சென்னைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

    இதேவேளை, சாந்தன் நாடு திரும்புவதற்கு உதவுமாறு அவரது தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி பல தரப்பினருக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.

    33 ஆண்டுகளாக பிரிந்திருந்த நிலையில் இறுதி நேரத்திலாவது ஒரு தடவை முகத்தை பார்த்துவிட வேண்டும் என்ற பெருந்தவிப்புடன் சாந்தனின் தாயார் போரடிவந்த நிலையில் தாயும் மகனும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Leave A Comment