• Login / Register
  • செய்திகள்

    மொபைல் செயலி கடனால் பரிதாபமாக உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்!

    மொபைல் செயலிகளில் பெற்ற கடனைத் திருப்பி செலுத்த இயலாத நிலையில் தெலங்கானாவைச் சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மொபைல் செயலிகளில் தொடர்ந்து பெற்றுக்கொண்ட  கடனைத் திருப்பி செலுத்த முடியாத நிலையில் செயலிகளின் முகவர்கள் கொடுத்த அழுத்தத்தில் மாணவர் இந்த முடிவுக்கு சென்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    பி.டெக் மூன்றாமாண்டு மாணவர் நேற்றையதினம்(27) வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் உயிரை மைத்துக்கொண்டுள்ளார்.

    முதல்கட்ட விசாரணையில், மாணவர் மொபைல் கடன் செயலிகள் தவிர அவரது நண்பர்களிடமும் மற்ற மாணவர்களிடம் கடன் பெற்றுள்ளார். ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் இழந்ததாகவும் கடன் குறித்த மன அழுத்தத்தில் அவர் இருந்ததாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

    மாணவரின் தந்தை ரூ.3 லட்ச கடனைத் திருப்பி அளித்துள்ளார்.

    கடன் அடைக்கப்பட்டபோதும் செயலிகளின் முகவர்கள் மாணவரின் குடும்பத்தினருக்கு தொடர் தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதை தொடர்ந்து மாணவர்  இறந்துள்ளார்.



    Leave A Comment