• Login / Register
  • செய்திகள்

    நாடாளுமன்ற தேர்தல்-2024: கயல்விழிக்கு முக்கிய பொறுப்பு!

    நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சட்ட ஆலோசகராக அக்காட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்மொழி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்திய ஒன்றி நாடாளுமன்ற தேர்தல் - 2024 நெருங்கி வரும் நிலையில் மாநில மற்றும் தேசிய கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து பரபரப்பாக செயற்பட்டு வருகின்றன.

    தமிழ்நாட்டிலும் திராவிட கட்சிகள், தேசிய கட்சிகள் கூட்டணியை பலப்படுத்தும் வகையில் தொகுதி பங்கீடுகளில் மும்முரம் காட்டி வருகின்றன.

    வழமைபோன்று தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தீவிரமாக செயற்பட்டுவருகிறது.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக தொகுதி வாரியாக சட்ட ஆலோசகர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் தென்சென்னை தொகுதி சட்ட ஆலோசகராக சீமானின் மனைவி கயல்விழி காளிமுத்து நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
     
    இதையடுத்து அவர் தென் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினருக்கு சட்ட ஆலோசனை வழங்குவார்.

    Leave A Comment