• Login / Register
  • செய்திகள்

    யாழில் 26 நாட்களேயான குழந்தை பலி!

    தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 26 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (03) உயிரிழந்துள்ளது.

    மிருசுவில் வடக்கு, மிருசுவிலை சேர்ந்த தாசன் அஸ்வின் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு பிந்து 26 நாட்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

    குறித்த குழந்தை பிறந்தது முதல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளது.

    இவ்வாறு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் கடந்த 24 ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போது தாய்ப்பால் புரைக்கேறி வாந்தி எடுத்துள்ளது.

    இதுகுறித்து வைத்தியரிடம் தெரிவத்த போது இனிமேல் பால் கொடுக்க வேண்டாம் என வைத்தியர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் (03) ஞாயிற்றுகிழமை முற்பகல் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

    குறித்த இறப்பு தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மரண விசாரணையினை மேற்கொண்டு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட்டிருந்தார். இதன்போது குழந்தையின் சுவாசக்குழாயில் பால் இருந்தமையினால் குழந்தை உயிரிழந்திருப்பதாக பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment