வீழ்ந்து நொருங்கிய பயிற்சி விமானம்: 2 விமானிகள் பலி
தெலங்கானா மாநிலம் - ஹைதராபாத் அருகே இந்தி விமானப் படையின் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேடக் மாவட்டத்தில் டூப்ரான் அருகே ஹைதராபாத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் பயிற்சி விமானம் ஒன்று திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. விமானம் பாறைகளுக்கு இடையே விழுந்ததும் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 2 விமானிகள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த பகுதிக்கு விரைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Leave A Comment