• Login / Register
  • செய்திகள்

    பாஜக முக்கிய பிரமுகர் அதிமுகவில் ஐக்கியம்!

    பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ சரஸ்வதியின் மருகனும், முன்னாள் மக்களவை உறுப்பினர் டாக்டர் சவுந்தரத்தின் மகன், அஷோக் குமார் பாஜக-வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளமை பாஜக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டு அரசியல் எல்லை கடந்து இந்திய தேசிய அரசியல் எல்லை வரை வியாபித்துள்ள அதிமுக-பாஜக பிளவு சர்ச்சை நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில் பாஜக கூடாரத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ள அஷோக் குமார் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    பாஜக மாநில ஓபிசி அணியின் துணைத்தலைவர் அஷோக் குமார், அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மக்களவைத் தேர்தலுக்கு அதிமுகவை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தயார்படுத்தி வரும் நிலையில் பிற கட்சிகளில் இருந்து அதிமுகவை நோக்கி படையெடுப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு அமமுகவை சேர்ந்த தலைமை நிலையச் செயலாளர் ஐ.மகேந்திரன் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

    அதேபோல பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளும் இணைந்து தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுக்கும், தமிழக பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில், பாஜக மாநில ஓபிசி அணியின் துணைத்தலைவர் அஷோக் குமார், அக்கட்சியில் இருந்து விலகி சென்னை பசுமைவழி சாலையில் உள்ள எடப்பாடியார் இல்லத்தில் அவரை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

    அசோக் குமார் மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருகனும், முன்னாள் மக்களவை உறுப்பினர் டாக்டர் சவுந்தரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக எம்எல்ஏ மருமகன் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Leave A Comment