• Login / Register
  • செய்திகள்

    WC-2023 | இந்தியா படுதோல்வி; விரக்தியில் இளைஞர் மரணம்!

    நடைபெற்று முடிந்த உலக கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை தாங்கமுடியாமல் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    இந்தியா - திருப்பதி மாவட்டத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இவ்வருடம் இந்தியா நடத்தி வந்தது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றிருந்தன.

    நேற்று முன்தினம் (19) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிபோட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளின் மோதின. நடப்பு தொடரில் எதிர்கொண்ட அனைத்து போட்டிகளிலும் அபார வெற்றிகளை குவித்து வந்த இந்திய அணி இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்திருந்தது.

    இந்த சம்பவமானது ஒட்டுமொத்த இந்திய அணி ரசிகர்களையும் நிலைகுலைய செய்தது. இதனால் உயிர் பறிபோன சம்பவம் இந்தியாவின் திருப்பதி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

    திருப்பதி அருகே துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஜோதி குமார் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டில் இருந்து இறுதி போட்டியை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். இதில் இந்தியா தோல்வியடைந்ததையடுத்து இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். குறித்த இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Leave A Comment