• Login / Register
  • செய்திகள்

    அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி காலமானார்!

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரின் மனைவி ரோஸலின் கார்டர்(வயது 96) நேற்று காலமானார். 

    டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று(நவ. 18) காலமானார். 

    1977-81 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் 39-ஆவது அதிபராக இருந்தவர் ஜிம்மி கார்டர். இவரது மனைவி ரோஸலின் கார்டர், ஒரு சமூக ஆர்வலர், மனநல ஆலோசகர். ஜிம்மி கார்டர் அதிபராக இருந்தபோது, அவருக்கும் பெரிதும் உதவியாக இருந்துள்ளார். 



    இந்நிலையில் ஜிம்மி கார்டர் தனது மனைவி குறித்து உருக்கமாகக் கூறியுள்ளார். 'நான் சாதித்த எல்லாவற்றிலும் அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். எனக்குத் தேவையானபோது புத்திசாலித்தனமான வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் கொடுத்தவர். ரோஸலின் இந்த உலகில் இருக்கும் வரை, யாரோ ஒருவர் என்னை நேசித்தார், ஆதரவாக இருந்தார் என்பதை உணர்ந்தேன்' என்று கூறியுள்ளார். 

    அமெரிக்க அதிபர்களில்  நீண்ட நாள் தம்பதி என்ற பெருமையை பெற்றுள்ள இவர்கள், கடந்த ஜூலை மாதம் தங்களது 77 ஆவது ஆண்டு  திருமண நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. 


    Leave A Comment