• Login / Register
  • செய்திகள்

    நவ-27 நினைவேந்தலுக்கு அனுமதி - மல்லாகம் நீதிமன்றம் அதிரடி!

    மாவீரர் நாள் நிளைவேந்தலுக்கு தடை கோரும் விண்ணப்பத்தை மல்லாகம் நீதிமன்றம் சற்று முன்னர் நிராகரித்துள்ளது.

    தமிழீழ தேசிய மாவீரர் நாள்-2023 நிகழ்வுகள் வரும் 27 ஆம் திகதி தமிழர் தாயகம் உள்ளிட்ட உலகெங்கும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள பொலிஸ் நிலங்கள் சார்பில் அந்தந்த பிரதேசங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுன்னு தடை விதிக்க கோரி நீதிமன்றங்களில் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

    அவ்வாறு, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி தெல்லிப்பழை பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை இன்று (நவம்பர்-20) சற்று முன்னர் மல்லாகம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

    Leave A Comment