• Login / Register
  • செய்திகள்

    குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குக்கு ஆளுநர் ஒப்புதல்!

    குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான  நீதிமன்ற விசாரணையைத் தொடங்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 

    இதுதொடர்பாக உச்சநிதிமன்றத்தில் ஆளுநர் ரவித் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கை மூலம் விவரம் வெளியாகியுள்ளது. அதில், கடந்த 13ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஆளுநர் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    விஜயபாஸ்கர், ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ அனுமதி கோரியது. 2022 செப்.12ல் அனுமதி கோரிய நிலையில் 14 மாதங்களுக்கு பிறகு நவ.13ல் ஆளுநர் ரவில் ஒப்புதல் அளித்துள்ளார். 

    குட்கா முறைகேடு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உயர்நிதிமன்றம் உத்தரவிட்டது. 



    Leave A Comment