• Login / Register
  • செய்திகள்

    மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

    மகாராஷ்டிர மாநிலத்தின் ஹிங்கோலி பகுதியில் இன்று  லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில்  மகாராஷ்டிர மாநிலத்தின் ஹிங்கோலி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் எனப் பதிவாகியுள்ளது.

    இதனால் ஹிங்கோலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.


    Leave A Comment