தீயில் எரிந்து 40 படகுகள் நாசம்: விசாகப்பட்டினத்தில் மீனவர்கள் அதிர்ச்சி
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 படகுகள் எரிந்து நாசமாகியுள்ளது.
விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நள்ளிரவு ஒரு படகில் ஏற்பட்ட தீ அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 35 ஃபைபர் இயந்திர படகுகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர்கள் யாரேனும் படகுகளுக்கு தீ வைத்திருக்கலாம் என உள்ளூர் மீனவர்கள் சந்தேகிக்கின்றனர்.
Leave A Comment