• Login / Register
  • செய்திகள்

    பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற நிகராகுவா அழகி!

    எல் சால்வடார் நடைபெற்ற உலக பிரபஞ்ச அழகி போட்டியில், 
    நிகராகுவா நாட்டைச் சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் 2023-ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ளார்.

    எல் சால்வடார் நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்ஃபோ அரங்கில்  இந்த நிகழ்வு இடம்பெற்றது.

    ஷென்னிஸ் பலாசியஸ்-க்கு 2022 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற அமெரிக்காவின் கேப்ரியல் முடிசூட்டினார்.

    72வது பிரபஞ்ச அழகி போட்டி எல் சால்வடாரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஸ்வேதா ஷர்தா உள்ளிட்ட சுமார் 90 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.



    சான் சால்வடாரில் நடைபெற்று வந்த இப்போட்டியில் நிகராகுவா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள் இறுதி மூன்று இடங்களுக்குள் நுழைந்தனர். 

    முன்னதாக, இந்தியப் போட்டியாளர் ஸ்வேதா ஷர்தா அரையிறுதிக்குத் தகுதிபெற்று முதல் 20 இடங்களுக்குள் இடம்பிடித்தார். இருப்பினும், நீச்சலுடை சுற்றுக்குப் பிறகு அவரால் முதல் 10 இடங்களுக்குள் நுழைய முடியவில்லை.


    Leave A Comment