• Login / Register
  • செய்திகள்

    ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை – அப்பல்லோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    இதுவரை இந்த ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 156 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த நிலையில் இறுதியாக நடைபெற்று வரும் விசாரணையில் அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்திடம் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், இன்று அப்பல்லோ மருத்துவர் நரசிம்மன் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அதில், ஜெயலலிதாவிற்கு நிலையான சிகிச்சை வழங்கப்பட்டது என்றும், அவர் இறப்பதற்கு நான்கு நாட்கள் முன்பு தான் சந்தித்த போது நலமாக இருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.


    Leave A Comment