• Login / Register
  • மேலும்

    சாப்பிட்ட உடன் செய்யக்கூடாத 7 விடையங்கள்!

    எவ்வளவு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்டாலும் சாப்பிட்ட உடன் செய்யக்கூடாத சில விடையங்களை தவிர்ப்பது எப்போதும் நல்லது. அவ்வாறு சாப்பிட்ட உடன் செய்யக்கூடாத 7 விடையங்கள் பற்றி பார்க்கலாம்.



    01 ஊட்டச்சத்து நிபுணர்கள், பொதுவாக பழங்கள் எப்போதும் ஆரோக்கியமானவை என்று கூறுவார்கள். ஆனால் உணவுக்குப் பிறகு பழங்களை உட்கொள்வதால் அவை நம்முடைய உணவில் கலந்து உறுஞ்சுதலை கட்டுப்படுத்துகிறது. இதனால் செரிமான சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். மேலும் நாம் உட்கொள்ளும் உணவின் ஊட்டச்சத்து பண்பையும் மாற்றலாம்.

    02 புகைப்பிடிப்பது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். புகைப்பதால் நம் உடலுக்கு எவ்வளவு தீங்கு ஏற்படும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் உணவிற்குப் பிறகு புகைப்பிடிப்பது பத்துமடங்கு தீமையை நம் உடலுக்கு உண்டாக்குகிறது. சிகரெட் புகைப்பதால் புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். மேலும் இவை குடல் நோய்குறியை மோசமாக்கி பெருங்குடல் அழற்சிக்கு வழிவகுக்கிறது.



    03 உணவு உண்ட பிறகு தூங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இது உங்கள் உடலுக்கு நீங்களே செய்யும் தீங்கு ஆகும். உணவு உண்ட உடனே தூங்கும்போது, செரிமான பிரச்சனை ஏற்படுகின்றன. மேலும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு செரிமான செயல்முறையை பாதிக்கிறது.

    04 உணவு உண்ட பிறகு உடனே குளிப்பதை தவிர்க்கவும். உடனே குளிக்கும்போது உடலின் வெப்பநிலையை சீராக்க ரத்தம் சருமத்திற்கு விரைவாக செல்கிறது. இதனால் செரிமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடலில் செரிமான இயக்கத்திற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.

    05 நம்மில் பலருக்கு உணவு உண்ட உடன் தேநீர் அல்லது காபி அருந்தும் பழக்கம் இருக்கலாம். இது நமது உடலின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். நமது உடலில் இரும்புச்சத்து உறிஞ்சுதலை கட்டுப்படுத்தும் சில பினோலிக் கலவைகள் இதில் உள்ளன. எனவே உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தேநீர் அல்லது காபி குடிக்கலாம்.



    06 சாப்பிட்ட உடன் வயிற்றில் அழுத்தத்தை குறைக்கும் போது அது செரிமானம் மற்றும் இரைப்பை பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதனால் நமது உடலில் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே உணவு உண்ட உடன் பெல்டை தளர்த்துவதை தவிர்க்கவும். அதிகப்படியான உணவு உட்கொள்வதனால் இந்த பிரச்சினை நிகழ்கிறது.

    07 உணவு உண்டவுடன் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். உடனடியாக தண்ணீர் குடிக்கும்போது அது வயிற்றில் உள்ள நொதிகள் மற்றும் பழச்சாறுகளின் சுரப்பை குறைக்கிறது. அமிலத்தன்மை மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தி செரிமான இயக்கத்தை பாதிக்கிறது. சாப்பிடுவதற்கு குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன்னர் தண்ணீர் குடிக்க வேண்டும்.




    Leave A Comment