• Login / Register
  • மேலும்

    பிரபல தொழிலதிபர் பிரித்விராஜ் சிங் ஓபராய் காலமானார்!

    இந்தியாவில் ஹோட்டல் வணிக துறையில் முக்கிய பங்காற்றிய ஓபராய் குழுமத் தலைவரான பிரித்விராஜ் சிங் ஓபராய் (94 வயது) காலமானார்.

    சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இவரின் பங்களிப்பை பாராட்டி 2008-ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின் குடிமக்களுக்கான இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும் பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். 

    இந்தியாவில் ஹோட்டல் வணிகத்தின் முகத்தை மாற்றியவர் என்று இவர் அழைக்கப்படுகிறார். அகில இந்திய நிர்வாக கூட்டமைப்பினர் இவருக்கு 2013-ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தனர். 

    1988-ஆம் ஆண்டு முதல் ஓபராய் குழுமத்தின் தலைவராக பதவி வகித்து வந்த பிரித்விராஜ் சிங் ஓபராய் வயது முதிர்வின் காரணமாக கடந்த 2022 மே மாதம் பதவி விலகினார். 

    இவரின் இறுதிச்சடங்கு கபஷேரா பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது என ஓபராய் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    Leave A Comment