முட்டை இல்லாத சாக்லேட் வால்நட் பிரவுனி: செய்முறை இதோ
சாக்லேட் என்பது அனைவருக்கும் பிடிக்கும்.சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பிறந்த நாள், தீபாவளி மற்றும் திருமண நாள் என அனைத்து நாட்களிலும் சாக்லேட் போன்ற இனிப்பு பொருட்கள் சாப்பிடுவதும் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வதும் வழக்கம்.
குறிப்பாக, பிரவுனி எல்லா வயதினருக்கும் எப்போதும் பிடித்தமானது. இதனை குழந்தைகள் மிகவும் சாப்பிடுவர். முட்டை சேர்க்காமல் சாக்லேட் பிரவுனி எப்படி செய்து என்பதை பார்க்கலாம்.
தேவையானவை:
டார்க் சாக்லேட்- கால் கப்
வெண்ணெய்- 2 ஸ்பூன்
மைதா-5 ஸ்பூன்
சர்க்கரை- 3 ஸ்பூன்
பால்- 4 ஸ்பூன்
வெணிலா எசன்ஸ்- ஒரு சொட்டு
சாக்கோ சிப்ஸ்- 3 ஸ்பூன்
வால்நட்- 3 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பவுலில் டார்க் சாக்லேட் எடுத்து அதனை டபுள் பாயிலிங் முறையில் உருகச்செய்துகொள்ள வேண்டும். அதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் மற்றொரு கிண்ணத்தை வைத்து அதில் டார்க் சாக்லேட்டை போட்டு உருகும்படி செய்ய வேண்டும். அதன்பிறகு அதில் வெண்ணெய் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
அதன்பிறகு அந்த சாக்லேட் கலவையில் பொடித்த சர்க்கரை, மைதா சேர்த்து அதில் சிறிதளவு பால் சேர்த்து கெட்டி இல்லாமல் மென்மையாக கலக்க வேண்டும். அதில் வெணிலா எசன்ஸ், வால்நட் மற்றும் சாக்கோ சிப்ஸ் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை ஒரு காபி கப் அல்லது கேக் மோல்டில் ஊற்றி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் உப்பு போட்டு அதில் ஒரு ஸ்டாண்ட் வைத்து 15 நிமிடத்திற்கு ஃப்ரிஹீட் செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு பிரவுனி கலவையை எடுத்து உள்ளே வைத்து ஆவி வெளியே போகாத அளவுக்கு மூடி போட்டு மூடி 30 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.சுவையான, ஹெல்த்தியான சாக்லேட் வால்நட் பிரவுனி தயார். இதனை வெணிலா ஐஸ்கிரீமுடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்.
Leave A Comment