• Login / Register
  • மேலும்

    25 வருட தேடல்.. பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்

    உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களை கடந்துள்ளது.

    கூகுள் இன்று தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதனையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை( G25gle) டூடுல் வெளியிட்டுள்ளது. 

    தினசரி இணைய பயன்பாட்டில் கூகுளுக்கு முக்கியப்பங்கு உண்டு. எதைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினாலும், அதற்கு முதல் நுழைவாயிலாக இருப்பது இந்த தேடுபொறி தளம் தான். அவ்வளவு பிரசித்தமான கூகுள் தனது 25-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. 

    லாரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் ஆகிய இருவரால் கடந்த 1998-ல் இதேநாளில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் சுமார் 500 கோடி பயனாளர்களைப் பெற்றிருக்கும் கூகுள்இ தன்னை ஒவ்வொரு வருடமும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. 

    சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள் "கடந்த 25 ஆண்டுகளாக எங்களுடன் பயணித்ததற்காகப் பயனர்களுக்கு நன்றி. எதிர்காலம் நம்மை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்று கூகுள் டூடுல் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது. 
     




    Leave A Comment