உயரமாக வளர வேண்டுமா..? இதோ.. சூப்பர் டிப்ஸ்
இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் கொஞ்சம் குள்ளமாக இருப்பவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும், அது ஒரு குறை இல்லை என்றாலும் அந்த எதிர்பார்ப்பும் ஆசையும் இருக்கும்.
பெரும்பாலும் உயரக் குறைபாடு ஏற்படுவதற்கு ஜீன்கள் ஒரு காரணமாக இருக்கும். ஒருவேளை ஜீன்களில் வளர்ச்சியை அடையக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று இருந்தால் உயரமாகலாம். இல்லாவிட்டால் முடியாது. 21 வயதிற்கு மேல், உடலின் வளர்ச்சியானது நின்றுவிடும். ஆனால் ஒருவேளை அதிர்ஷ்டம் இருந்தால், சரியான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வளர்ச்சியை காணலாம். அதிலும் 21 வயதிற்குட்டவர்கள், இத்தகைய உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், எளிதில் உயரமாகலாம்.
உயரத்தை அதிகரிக்க எத்தனையோ நவீன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், இயற்கை முறையையே அனைவரும் விரும்புகின்றனர். உயரத்தை அதிகரிக்க கருவிகளின் உதவியின்றி இயற்கையாக என்னவெல்லாம் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

உயரத்தை அதிகரிக்க வேண்மெனில், தினமும் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, தசைகளில் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
பாலில் உள்ள கால்சியம், வைட்டமின் டி மற்றும புரோட்டீன் ஆகிய மூன்று சத்துக்களும், உடலின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதவை. எனவே பாலை தினமும் தவறாமல் 2-3 டம்ளர் குடித்து வர வேண்டும்.
உயரத்தை அதிகரிக்க விரும்புபவர்கள் தினமும் நீச்சல் பயிற்ச்சியை மேற்கொள்ளலாம். தினமும் நீச்சல் அடிப்பதன் மூலம் உடல் அமைப்புகள் விரிவடைகிறது. இதனால் நீங்கள் சீராக உயரத்தை அதிகரிக்க முடியும். மேலும் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.
கம்பியை பிடித்துக் கொண்டு தொங்குவதன் மூலம் உயரத்தை அதிகரிக்கலாம். அதிலும் இதனை இளம் வயதில் அதிகம் செய்து வந்தால், தண்டுவடமானது நன்கு வளர்ச்சியடையும். இது உயரமாவதற்கு உதவியாக இருக்கும்.
முட்டையிலும் பாலில் நிறைந்துள்ள சத்துக்களான கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்களுடன், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டும் நிறைந்துள்ளது. எனவே உயரமாக வளர ஆசைப்பட்டால், தினமும் பாலுடன், வேக வைத்த முட்டையையும் சாப்பிட வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
தினமும் காலை அல்லது மாலை நேரங்களில் ரன்னிங் அல்லது ஜாகிங் 1/2 மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை செய்து வாருங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் உயரத்தை அதிகரிக்கலாம்.
பிட்யூட்டரி சுரப்பியில் வளர்ச்சிக்கு காரணமான எச்.ஜி.எச் எனப்படும் வளர்ச்சி ஹார்மோன் உள்ளடங்கி இருக்கிறது. இது இளமை பருவத்தில் தூக்கத்தின் போது வெளியிடப்படும். அதனால் இளமை பருவத்தில் போதுமான தூக்கம் அவசியம். இரவில் சீக்கிரமாக தூங்கும் பழக்கத்தை பின்பற்றுங்கள். அதுகூட உயரமாக வளர உதவும்.

தினமும் புஜங்காசனத்தை செய்து வருவதன் மூலமும், உயரமாகலாம். அதற்கு தடையில் குப்புற படுத்து, இரண்டு கைகளையும் தரையில் மார்ப்புக்கு பக்கவாட்டில் பதித்து, முதுகை மேலே தூக்க வேண்டும். இதனால், உடலின் மேல் பகுதியில் உள்ள தசைகளானது மேல் நோக்கி நீண்டு, உயரமாவதற்கு உதவி புரியும்.
இறைச்சிகளான சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம், தசைகள் வளர்ச்சியடையும். ஏனெனில் இதில் தசைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீனானது அதிக அளவில் நிறைந்துள்ளது.
நேராக நின்று கொண்டு, இரண்டு குதிகால்களை மேலே தூக்கி (பாதவிரல்களால் நின்று), இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி, முடிந்த அளவில் கைகளை நீட்ட வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள அனைத்து தசைகளும் நீண்டு, உயரமாக உதவியாக இருக்கும்.
சைவ உணவாளர்களுக்கு, ஒரு சிறந்த புரோட்டீன் உணவு என்றால் அது சோயா பொருட்கள் தான். எனவே சோயா பால், டோஃபு போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, தசைகளும் வளர்ச்சியடையும்.

கராத்தே பயிற்சியில் செய்யப்படும் ஒரு முறை தான் காலை உதைத்தல். இதற்கு படத்தில் காட்டியவாறு நின்று, ஒரு காலை மட்டும் மேல் நோக்கி உதைக்க வேண்டும். இது போன்று மற்றொரு காலையும் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் குறைந்தது 10 முறை செய்து வந்தால், கால்கள் வளர்ச்சியடைய உதவும்.
கடல் பவளப் பாசிகளில் இருந்து செய்யப்படுவது தான் கோரல் கால்சியம். அந்த கால்சியத்தை சாப்பிடுவதன் மூலம், எலும்புகள் வலுவுடன் இருப்பதோடு, நன்கு வளர்ச்சியடையும்.
Leave A Comment