• Login / Register
  • மேலும்

    உங்கள் வீட்டில் புறா கூடு கட்டியிருக்கிறதா..? என்ன அறிகுறி தெரியுமா?

    ஜோதிட சாஸ்திரங்களில் நம்பிக்கை உரியவர்களாக நீங்கள் இருந்தால் வீட்டில் இருக்கும் விலங்குகள் பறவைகள் பற்றிய நம்பிக்கைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் அவற்றில் வீட்டில் புறா கூடுகட்டினால்  என்ன பலன் என்று பார்க்கலாம்.
     
    சில சமயங்களில் நமது வீடுகளில் பறவைகள் கூடு கட்டுவதை பார்த்திருப்போம். அவை பொதுவாக ஜன்னல் ஓரம், கட்டிட இடுக்குகள், ஆள் புழக்கம் இல்லாத பகுதிகளில் பொதுவாக கூடு காட்டும். இதை பார்த்து பல முறை நாம் ரசித்திருப்போம். 

    வீட்டில் புறா கூடு கட்டுவது வீட்டில் வசிப்பவர்களுக்கு பணம் வருவதற்கான அறிகுறியாகும்.

    புறா லட்சுமி தேவியின் பக்தராக கருதப்படுகிறது. அதனால் தான் வீட்டில் புறா கூடு வைப்பது மங்களகரமானது என கருதப்படுகிறது.

    புறா கூடு கட்டும் வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும் என்பது நம்பிக்கை. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பறவை கூடு கட்டுவது அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே பறவையின் கூட்டை ஒருபோதும் உடைக்கக்கூடாது.

    ஆனால் வீட்டிற்குள் புறாக்கள் வருவது உங்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தும் என சூழலியலாளர்கள் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



    Leave A Comment