அறிமுகமானது ஆப்பிள் ஐஃபோன் 15: விலை என்ன தெரியுமா?
ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 15 மாடல் நேற்று(செப். 12) ஆம் தேதி சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
ஐஃபோன் 15 சீரீஸில் ஐஃபோன் 15, ஐஃபோன் 15 பிளஸ், ஐஃபோன் 15 ப்ரோ, ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் உள்ளன.
ஐஃபோன் 15 மாடல் ரூ. 79,900 -க்கும், ஐஃபோன் 15 பிளஸ் ரூ. 89,900-க்கும், ஐஃபோன் 15 ப்ரோ மாடல் ரூ. 1,34,900-க்கும், ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ. 1,59,900 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் முன்பதிவு செய்யலாம். செப். 22 ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்படுகிறது.
இதில் மிகவும் பிரகாசமான டிஸ்பிளே, 48 மெகா பிக்சல் கேமரா, மறுசுழற்சி செய்யக்கூடிய நவீன பேட்டரிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. கிராபிக்ஸ், மொபைல் கேமிங் ஆகியவற்றுக்கு சிறந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள் நிறுவனங்களின் சார்ஜிங் போர்ட்டர்களுக்கு பதிலாக, ஐஃபோன் 15 மாடல்களில் டைப்-சி சார்ஜிங் போர்ட்டர் உள்ளது.
தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது 7% ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் தயாரிக்கிறது. 2025ல் இதனை 25% ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
Leave A Comment