வெள்ளை ஆடைகளை பாழாக்கும் மஞ்சள் கறை: தீர்வுகள் சில
வெள்ளை ஆடைகள் அணிவது மதிப்புமட்டுமல்ல மனதுக்கும் ஒரு புத்துணர்வை தரும் எனினும் வெள்ளை ஆடைகளை தேர்வுசெய்வதில் டிருக்கும் தயக்கமே அது எளிதில் அழுக்காகிவிடும் என்பதுதான்.
வெள்ளை ஆடைகளை பாழாக்கும் மஞ்சள் கறைகளை போக்குவது பெரிய சவாலான விடயம்தான். அதற்கான சில எளிய வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.
காஸ்டிக் சோடா
காஸ்டிக் சோடாவின் கெமிக்கல் பெயர் சோடியம் ஹைட்ராக்சைடு என்பதாகும். இது lye என்றும் குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக காஸ்டிக் சோடா நாள்பட்ட அழுக்கு மற்றும் கறைகளை நீக்க, சோப் மற்றும் டிடெர்ஜென்ட்ஸ் தயாரிக்க மற்றும் drain pipe cleaner-ஆக என பல வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
காஸ்டிக் சோடா திரவ மற்றும் திட என இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது. இந்த இரண்டு வகைகளுமே அதிக காரத்தன்மை (alkaline) கொண்டவை. காஸ்டிக் சோடாவானது கடைகளில் ஓரளவு மலிவான விலையில் எளிதாக கிடைக்கிறது. இது வெள்ளை ஆடைகளின் மஞ்சள் கறைகளை போக்க உதவக்கூடியது.
ஆனால் இதனை பயன்படுத்தும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம். அவை என்னவென்பதை கீழே பார்க்கலாம்.
காஸ்டிக் சோடாவை நேரடியாக கைகளால் தொடும் போது அதிலிருந்து வெப்பம் வெளியேறி சருமத்திற்கு எரிச்சல் உள்ளிட்ட சில மோசமான விளவுகளை ஏற்படுத்த கூடும். எனவே கைகளில் கிளவுஸ் அணிந்து கொண்டு காஸ்டிக் சோடாவை பயன்படுத்துவது சிறந்தது.
குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் அவர்களின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
அதே போல காஸ்டிக் சோடாவை பயன்படுத்தும்போது, அடர் வண்ண ஆடைகளை (dark colored clothes) அணியக்கூடாது, இல்லையெனில் அவற்றின் நிறம் மங்கக்கூடும்.

ஒரு பக்கெட் அல்லது டப்பில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து கொண்டு அதில் வழக்கமாக பயன்படுத்தும் வாஷிங் பவுடரை தேவைக்கேற்ப கலக்கவும்.
பின் இதில் 2 - 3 ஸ்பூன் காஸ்டிக் சோடாவை சேர்த்து ஒரு மர குச்சியால் தண்ணீரில் கலக்கவும்.
நன்கு கலந்த பிறகு பக்கெட்டில் உள்ள கரைசலில் மஞ்சள் நிற கறைகள் இருக்கும் வெள்ளை நிற ஆடைகளை நன்கு அழுத்தி சுமார் 2 முதல் 3 மணிநேரங்களுக்கு அப்படியே ஊறவைத்து விடவும்.
சுமார் 3 மணி நேரம் கழித்து ஊறவைத்து துணியை வழக்கமான முறையில் துவைக்கவும்.
இப்போது பார்த்தால் மஞ்சள் கறைகள் நீங்கள் உங்கள் ஆடை புதியது போல பிரகாசிக்கும். ஒருவேளை நீங்கள் வாஷிங் மெஷினில் துணி துவைக்க நினைத்தால், இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் காஸ்டிக் சோடாவை டிடர்ஜென்ட் பவுடர் அல்லது லிக்யூட் டிடர்ஜென்ட் சேர்த்து மெஷினில் போட்டு வழக்கம் போல் துணிகளை துவைக்கலாம்.
Leave A Comment