• Login / Register
  • மேலும்

    இனி UPI செயலியில் லோன் எடுக்கலாம்..?!

    யூபிஐ செயலியில் ப்ரீ அப்ரூவ்ட் லோன் எடுக்கும் வசதியை கொண்டுவர ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அனுமதித்துள்ளது.

    UPI என்பது இந்தியாவில் 75 சதவீத சில்லறை டிஜிட்டல் பேமெண்ட்டுகளை கையாளும் ஒரு வலுவான பேமெண்ட் தளமாகும். தற்போது, சேமிப்புக் கணக்குகள், ஓவர் டிராஃப்ட் கணக்குகள், ப்ரீபெய்டு வாலட்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளை இதனுடன் இணைத்துக் கொள்ள முடியும். 

    ஆகஸ்ட் மாதத்தில் UPI செயலி 10 பில்லியன் பரிவர்த்தனைகள் என்ற மைல்கல்லை எட்டியது. அதோடு பரிவர்த்தனை தொகை ₹15.76 லட்சம் கோடியை எட்டியது.

    தினமும் 10 லட்சம் பேர் இந்த UPI வசதியை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போதுதான் இந்த வகை பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா காலத்தில் இருந்தே UPI பயன்பாடு உச்சத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் யுபிஐ வசதியில், ப்ரீ அப்ரூவ்ட் லோன் எடுக்கும் வசதியை கொண்டு வர ஆர்பிஐ அனுமதித்துள்ளது. அதாவது கடன் வாங்கும் வசதியை யுபிஐ செயலிகளுக்கு வழங்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளது.

    இது சம்பந்தமாக ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், “டெபாசிட் கணக்குகளுக்கு வங்கிகளில் முன் அனுமதியளிக்கப்பட்ட கிரெடிட் லைன்களுக்கு பரிமாற்றத்தை செயல்படுத்துவதன் மூலம் UPI செயலி விரிவுபடுத்தப்பட இப்போது முன்மொழியப்பட்டுள்ளது. UPI நெட்வொர்க் வங்கிகளின் கடன் மூலம் பணம் செலுத்துவதை எளிதாக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.




    Leave A Comment