• Login / Register
  • மேலும்

    நிலா, பூமியை படம்பிடித்து ஆதித்யா-எல்1 அசத்தல்!

    சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பி ஆதித்யா-எல்1 விண்கலம் தன்னத் தானே சுய படம் எடுத்துள்ளதுடன் நிலா, பூமியையும் படம் எடுத்து அனுப்பியுள்ளது.

    இது குறித்த தகவலை இஸரோ வெளியிட்டுள்ளது.

    இந்தியாவின் நிலவுக்கான பயணம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு என்கிற சாதனை இந்தியா வசமாகியுள்ள நிலையில் சூரியானை ஆய்வு செய்வதற்காக 'ஆதித்தியா-எல்1' விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

    சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலம், பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் கடந்த (02) சனிக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது. தற்போது புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இந்த விண்கலம் பயணித்து வருகிறது.

    இதன் சுற்றுப்பாதையை படிப்படியாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆதித்யா-எல்1ல் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. ஆதித்யா-எல்1 விண்கலம் தன்னைத் தானே செல்ஃபி எடுத்துக் கொண்டதோடு தனது வட்டப்பாதையில் இருந்து பூமி மற்றும் நிலவையும் படம் பிடித்துள்ளது.

    அதனை இஸ்ரோ தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. சுமார் 41 நொடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள படங்கள் கடந்த 4-ம் தேதி எடுக்கப்பட்ட படம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    சுமார் 4 மாத கால பயணத்துக்கு பிறகு, 2024 ஜனவரி தொடக்கத்தில், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ள எல்-1 பகுதி அருகே விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து சூரியனின் வெளிப்புற பகுதியை ஆதித்யா-எல்1 ஆராய உள்ளது.

    Leave A Comment