கூகுளின் புதிய அறிமுகம்..! இந்தியா மற்றும் ஜப்பானில் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு !
கூகுள் நிறுவனம், இந்தியா மற்றும் ஜப்பானில் கூகிளின் பிரசித்தி பெற்ற கூகுள் தேடு பொறியில் அதாவது Google Search இல் ஜெனரேட்டிவ் ai என்பதை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது என்ன, இது எவ்வாறு செயல்படும் என்பதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் கடந்த புதன்கிழமை தனது கூகிள் தேடுபொறியில், இந்தியா மற்றும் ஜப்பான் யூசர்களுக்காக ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
சாதாரணமாக ஒரு விஷயத்தை கூகுள் தேடுவதற்கும், ai சேர்க்கப்பட்ட தேடலுக்கும் கிடைக்கும் முடிவுகள் வேராக இருக்கும். ஜெனரேட்டிவ் ai தேடல்கள், யூசரின் தேடலுக்கு, லிங்க்குகளை மட்டும் தேடல் முடிவுகளாகக் காட்டாமல், டெக்ஸ்ட், புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் உள்ளிட்ட விஷுவல் முடிவுகளாக மற்றும் அதற்கான சம்மரிகளுடன் வெளியாகும்.
இந்த அம்சம் முதன் முதலாக அமெரிக்காவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மேலும் இரண்டு நாடுகளில் அறிமுகமாக இருக்கிறது. யூசர்கள் இதைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளலாம்.
இந்த அம்சம் அறிமுகம் அறிமுகமான பின்பு ஜப்பானில் தங்களுடைய உள்ளூர் மொழிகளில் இதை பயன்படுத்தலாம். இந்தியாவைப் பொறுத்தவரை பல மொழிகள் பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.
செயற்கை நுண்ணறிவு பரவலாக chatbotகளாக அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், கூகுள் தேடலும் சாட்பாட்டும் வெவ்வேறானவை. தற்போது இரண்டும் இணைந்து செயல்பட இருக்கிறது. கூகுள் ai இணைக்கப்பட்ட சர்ச் இன்ஜின், இப்போது மைக்ரோஃசாப்ட் ai இணைக்கப்பட்ட bing இன்ஜினுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது.
Leave A Comment