இனி 2 மணி நேர வீடியோ: ட்விட்டரின் அசத்தல் அப்டேட்
ட்விட்டரில் மைக்ரோ பிளாக்கிங் தளத்தின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் இனி 2 மணி நேர விடியோக்களை பதிவேற்ற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முந்தைய 60 நிமிட வரம்பை இனி இரண்டு மணி நேரமாக விரிவுபடுத்தியுள்ளது.
எலான் மஸ்க் இந்த செய்தியை அறிவித்த உடனே, பல சமூக ஊடக பயனர்கள் தங்கள் கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு பயனர், 'ட்விட்டர் புதிய நெட்ஃபிக்ஸ்' என்று பதிவு செய்துள்ளார். மற்றொரு பயனர், 'மிகவும் அருமை! இது சாத்தியமாவதற்கு நன்றி என்றார்'.
'ட்வீட்யூபிற்கு வரவேற்கிறோம் என்று ஒரு பயனர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த அப்டேட் தற்போது ப்ளூ டிக் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்க பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave A Comment