• Login / Register
  • மேலும்

    புதிய ஏர்பாட்ஸ் வைத்திருக்கிறீர்களா..? அதை கையாள்வதற்கான சில சூப்பர் டிப்ஸ்!


    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் அல்லது ஏர்பாட்ஸ் ப்ரோ நீங்கள் வாங்கி இருந்தால் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்றும், அவற்றில்  மறைந்துள்ள சில வசதிகளை பற்றியும், அவற்றை பராமரிப்பது எப்படி என்றும் இங்கு பார்க்கலாம். 

    உங்களது ஏர்பாட்ஸ்களை ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட், மேக், ஆப்பிள் டிவி, விண்டோஸ் லேப்டாப், மற்றும் மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடனும் நீங்கள் தயார் செய்து பயன்படுத்த முடியும். ஏர்பாட்ஸ்டுகளுக்கு பின் இருக்கும் சிறிய பட்டனை அழுத்தி நீங்கள் டிவைசுடன் ஷேர் செய்யலாம்.

    இந்த பைண்ட் மை ஃபீச்சர் வசதியானது ஏர்பாட்ஸ் 3 மற்றும் ஏர்பாட்ஸ் ஆகியவற்றில் உள்ளது. இதன் மூலம் உங்களது ஏர்பாட்ஸ்களின் கேசை, நீங்கள் தவறுதலாக எங்கேயும் மறந்து வைத்து விட்டாலும் அல்லது தொலைந்து விட்டாலும் ஒரு நோட்டிபிகேஷன் அலர்ட் மூலம் உங்கள் உங்கள் ஃபோனிலேயே ஏர்பாட்ஸ் இருக்கும் இடத்தை கண்டறிந்து விட முடியும்.



    உங்களது இயர் பட்ஸ் மூலமே பெரும்பாலான கட்டளைகளை உங்களால் கஸ்டமைஸ் செய்து வைத்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஆக்டிவேட் சிரி, பாடல்களை மாற்றுவது, பிளே மற்றும் பாஸ் செய்வது போன்ற விஷயங்களை செய்ய முடியும். இதற்கு உங்கள் மொபைலில் ஏர்பாட்ஸ்களின் பெயருக்கு பக்கத்தில் உள்ள i என்ற பட்டனை கிளிக் செய்து, அதன் பின் ஏர்பாட்ஸ் என்பதை தேர்வு செய்து உங்களுக்கு வேண்டிய கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

    உங்களது ஏர்பாட்ஸ்களை ஒன்றுக்கு மேற்பட்ட டிவைஸ்களுடன் ஏற்கனவே பேர் செய்து வைத்திருந்தால் அவை தானாகவே ஒரு டிவைஸிலிருந்து மற்ற டிவைஸுக்கு மாறும் போது அதனுடன் பேர் ஆகி விடும். இந்த ஆட்டோமேட்டிக் ஸ்விட்ச் வசதியை நீங்கள் மாற்றிக் கொள்ளவும் முடியும்.

    செயற்கை நுண்ணறிவான சிரி, ஏர்பாட்ஸ்களுடன் இணைந்துள்ள போது, வரும் அழைப்புகளையும் குறுஞ்செய்திகளை அறிவிக்கும் படி சிரியை கட்டளையிடலாம். அதற்கு செட்டிங்ஸ், நோட்டிபிகேஷன், என்ற ஆப்ஷன்களை தேர்வு செய்து அதில் நோட்டிபிகேஷன் அண்ட் ஹெட் போன் என்பது தேர்வு செய்ய வேண்டும்..

    இப்பொழுது ஏர்பாட்ஸ் பேட்டரி சதவீதத்தை, ஐ போனில் அல்லது ஐபேடிலும் நீங்கள் பார்த்து அறிந்து கொள்ள முடியும். மேலும் சிரியை கேட்டும் ஏர்பாட்ஸ் பேட்டரி நிலையை நீங்கள் கண்டறிய முடியும்.



    உங்களது ஏர்பாட்ஸ்களின் பெயரை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். அதற்கு செட்டிங்ஸ், ப்ளூடூத் என்பதில் சென்று அதில் ஏர்பாட்ஸ் பெயரில் பக்கத்தில் உள்ள i தேர்வு செய்து நேம் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

    உங்களது ஏர்பாட்ஸ்களில் 3d சவுண்ட் வசதியை நீங்கள் ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். ஏர்பாட்ஸ் 3, ஏர்பாட்ஸ் ப்ரோ ஆகியவற்றில் இந்த வசதி உள்ளது. இதற்கு கண்ட்ரோல் சென்டர் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து வால்யூம் ஸ்லேடர்களுக்கு அருகில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்ற ஐகானை தேர்வு செய்ய வேண்டும். அதை லாங் பிரஸ் செய்வதன் மூலம் ச்பேஷியல் ஆடியோ என்பதை கிளிக் செய்து 3d சவுண்டை தேர்வு செய்யலாம்.

    ஏஎன்சி எனப்படும் ஆக்டிவ் வாய்ஸ் கேன்சலேஷன் வசதி ஆப்பிள் ஏர்பாட்ஸ்களில் உள்ளது. இதை பெறுவதற்கு செட்டிங்ஸ், ஏர்பாட்ஸ்ஸ் ப்ரோ, ஆக்சஸிபிலிட்டி, நாய்ஸ் கண்ட்ரோல் என்பதை தேர்வு செய்து நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமில்லை என்றால் ஏதேனும் ஒரு இயர் பட்டுக்கு மட்டும் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை ஆக்டிவேட் செய்ய முடியும்.


    Leave A Comment