• Login / Register
  • மேலும்

    பாலோடு சேர்த்து சாப்பிடவே கூடாத உணவுகள் இவைதானாம்..! தெரிந்து கொள்ளுங்கள்!

    பாலோ அல்லது பாலில் தயாரிக்கப்பட்ட ஒரு உணவோ அன்றாடம் நாம் எடுத்துக்கொள்கிறோம்.அதிலும் சிலருக்கு பால் மிகவும் பிடித்த ஒரு உணவாகவே இருக்கலாம். இப்படி பல ஊட்டச்சத்துக்களைத்தருவதும் பெரும்பாலானோருக்கு பிடித்ததுமான பாலினை சில பொருட்களுடன் சேர்த்து எடுத்துக்கொள்வதை தவிர்த்துக்கொள்வது நல்லதாம் அவை எவை என்று இங்கு பார்க்கலாம்.

    பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் சத்து என்று கூறுவார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. ஏனெனில், பால் மிகவும் குளிர்ச்சியான உணவு, வாழைப்பழம் சூடான உணவு. இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் செரிமானத்தில் பிரச்சனை ஏற்பட்டு டாக்சின் எனும் நஞ்சை வயிற்றில் உண்டாக்கும். எனவே பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட கூடாது.

    இறைச்சியில் அதிகமான ப்ரோடீன் சத்து உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இது செரிமானம் ஆகுவதற்கு பல மணி நேரம் எடுத்து கொள்ளும். பாலும் அது போலவே எளிதில் செமிக்க கூடியது கிடையாது. இவை இரண்டையும் சேர்த்து உண்டால் கட்டாயமாக செரிமானத்தில் பிரச்சனை ஏற்படும். 



    ஸ்ட்ராபெரியில் மற்ற பழங்களை போலவே சத்தான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதற்காக இதையும் பாலையும் சேர்த்து சாப்பிடுவது தவறான செயலாகும். மீறி சாப்பிட்டால் ஸ்ட்ராபெரியில் உள்ள அமிலத்தன்மை அதிகமான வெப்பத்தை கொடுக்கும். மாறாக பால் குளிர்ச்சியான உணவாகும். இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் ஜீரண பிரச்சனைகள் ஏற்படுவதோடு அல்ர்ஜி, சளி, இருமல் போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    மீனை சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற சத்துக்கள் கிடைக்கிறது. ஆனால் மீன் சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பின்பு பால் குடிப்பது நிச்சயமாக ஆரோக்கியத்தை தருவதில்லை. மாறாக உடலில் நச்சு தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. சூடான உணவான மீனையும் குளிச்சி உணவான பாலையும் சேர்த்து சாப்பிடுவது கூடாத செயலாகும். இவை ரத்த ஓட்ட பிரச்சனை, இதய கோளாறு போன்ற பாதிப்புகளை உருவாக்கும்.

    முள்ளங்கி சாப்பிடுவதால் எந்த வித தீமையும் பக்க விளைவும் ஏற்படாது. ஆனால் பால் குடிப்பதற்கு முன் அல்லது பின் இந்த முள்ளங்கியை சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். ஆயுர்வேதத்தில் பால் குடித்து சிறிது நேரத்தில் முள்ளங்கி சாப்பிட கூடாது என்று உள்ளது. முள்ளங்கி சாப்பிட்டு குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து பால் குடித்தால் எந்தவித உடல் உபாதைகளும் ஏற்படாது.



    வீட்டில் பாலை குடித்துவிட்டு சில மணி துளிகளில் வெளியில் சென்று குளிர்பானம் அருந்தினால் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்பட அதிகமாக வாய்ப்பு உள்ளது. 

    எலுமிச்சை ஜூஸ் குடித்ததை மறந்து சிறிது நேரத்தில் பாலை பருகினால் குடலில் அல்ர்ஜி தொல்லை ஏற்பட்டு ஜீரண மண்டலம் பாதிப்படையும். ஏனெனில் எலுமிச்சையில் உள்ள அதிக சிட்ரிக் அமில தன்மை பாலுடன் சேர்ந்து வேதி மாற்றங்கள் அடைந்து உடல் உபாதை ஏற்பட காரணமாகிறது.

    சத்தான உணவுகளை பற்றி தெரிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு எதோடு, எதை சேர்த்து சாப்பிட வேண்டும் மற்றும் எதை சேர்த்து சாப்பிட கூடாது என்பதையும் கண்டிப்பாக தெரிந்து கொள்வது அவசியமாகும். 





    Leave A Comment