• Login / Register
  • மேலும்

    தொடரும் பணி நீக்கம் : 10,000 ஊழியா்களை பணிநீக்கும் ஃபேஸ்புக்!

    உலகளவில் பிரபல மென்பொருள் நிறுவனங்கள் பலவும் கொரோனா  அடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்துவரும் நிலையில்  மேலும் 10,000 ஊழியா்களை பணிநீக்கம் செய்ய ஃபேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா முடிவெடுத்துள்ளது. 

    ஃபேஸ்புக் இப்போது இரண்டாவது கட்ட ஆள்குறைப்பை அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியா்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இப்போது, மேலும் 10,000 ஊழியா்களை வெளியேற்ற முடிவெடுத்துள்ளது. சா்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் நிறுவனத்தின் வளா்ச்சி தொடா்ந்து குறைந்து வருவது போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை தவிா்க்க முடியாததாகிவிட்டதாக நிறுவனத்தின் தலைவா் மாா்க் ஸக்கா்பா்க் தெரிவித்துள்ளாா்.

    ஃபேஸ்புக் இந்த முடிவை எடுத்திருப்பது தொடா் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அத்துறை சாா்ந்த பணியாளா்கள் இடையே பணி தொடா்பான அச்சம் அதிகரித்துள்ளது.

    கூகுள், அமேஸான், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் ஏற்கெனவே முதல் கட்ட ஆள்குறைப்பை மேற்கொண்டுள்ளன. 

    Leave A Comment