பூச்சிகளின் எதிரி பொன்னியம் பற்றி தெரியுமா?
விவசாயத்தில் பெரிதும் பயன்படும் தயிர்
பற்றித்தான் தெரிந்துகொள்ள போகிறீர்கள்
இயற்கை விவசாயத்தில், ரசாயன உரங்களுக்கு பதிலான இயற்கை மருந்து மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.
தயிரை இயற்கை விவசாயத்தில் அப்படியே பயன்படுத்தாமல், தயிரை மாற்றி பொன்னியமாகப் பயன்படுத்துவது சிறப்பு அம்சம்.
தயாரிக்கும் முறை..!
5 லிட்டர் தயிரை காற்று புகாத பானையில் வைத்து அடைத்து, அதற்குள் செம்புக் கம்பியைப் போட்டுவிட வேண்டும்.
கம்பியின் கால்வாசி பகுதி வெளியே தெரியும் வகையில் வைக்க வேண்டியது அவசியம். 4, 5 நாட்களுக்கு பிறகு பார்த்தால், தயிர் பச்சை நிறமாக மாறியிருக்கும். இந்தக் கலவைக்கு பொன்னியம் என்று பெயர்.
பொன்னியத்தின் பயன்கள்
பொன்னியத்துடன் 5 லிட்டர் வேஸ்ட் கம்போஸரை கலந்து எல்லாப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதனால் பூச்சிகள் பயிர்களை அண்டவே அண்டாது.
யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தும்போது, பொன்னியத்தின் அளவைச் சற்று கூடுதலாக சேர்ப்பது நல்லது.
நெல், காய்கறிகள், மக்காச்சோளம், கோதுமை என்று அனைத்துப் பயிர்களின் மீதும் தெளிக்கலாம். இதனால் பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜன் சத்து கிடைக்கிறது.
இதனால் யூரியாவைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
பயிர்களைத் தாக்கும் பூஞ்சண நோய்கள்இ பூச்சிகள் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது.
பொன்னியத்துடன், மண்புழு உரம் கலந்த கலவையை நெற்பயிர் என்றால் தூவலாம்.
களர்பாலை நிலங்களில், சில பயிர்கள் விளையாது. அந்த மாதிரியான நிலங்களை மாற்ற இந்த பொன்னியத்தை தென் மாவட்டங்களில் அதிகளவில் பயன்படுத்தியது நம்மடைய பாரம்பரியம். தற்போது இந்த பொன்னியம் டெல்டா மாவட்டங்களில் பிரபலமாகி வருகிறது.
யூரியாவை விடக் குறைந்த விலை கொண்ட இந்த பொன்னியத்தை, எருவுடன் சேர்ந்தும் போடலாம்.மண்ணுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.
Leave A Comment