• Login / Register
  • மேலும்

    தஞ்சாவூா்: பெருமளவான நெல் தேக்கம்: விவசாயிகள் கவலை

    தஞ்சாவூா் மாவட்டத்தில் பெருமளவான நெல் கொள்வனவு நிலையங்களில்  செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் சம்பாஇ தாளடியில் சாகுபடி செய்யப்பட்ட 3.50 லட்சம் ஏக்கரில் இதுவரை ஏறத்தாழ 80 ஆயிரம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ளன.

    இதையொட்டிஇ மாவட்டத்தில் 456 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலையத்திலும் நாள்தோறும் சுமாா் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றாலும், நாள்தோறும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மூட்டைகள் அளவுக்கு நெல் வரத்து உள்ளது. 

    ஒவ்வொரு நிலையத்திலும் நிலவும் இடப்பற்றாக்குறை, ஆள்கள் பற்றாக்குறையே இதற்குக் காரணம். பெரும்பாலான நிலையங்களில் ஆயிரம் மூட்டைகள் மட்டுமே அடுக்கி வைக்கப்படும் அளவுக்கு கட்டட வசதி உள்ளது. பல நிலையங்களில் கட்டட வசதியும் இல்லாத நிலையில், திறந்தவெளியில் அடுக்கப்பட்டுஇ தாா்பாய்கள் மூலம் மூடப்படுகிறது. திறந்தவெளியில் அடுக்கப்பட்டாலும், அதற்கும் இட வசதி இல்லாததால், ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் அடுக்க முடியாது. இதுவே பல நிலையங்களில் ஒவ்வொரு நாளும் நெல் குவியல்கள் குவிந்து தேங்குவதற்கு காரணமாக உள்ளது.

    அறுவடைப் பருவ தொடக்கத்திலேயே இப்பிரச்னை நிலவும் நிலையில், உச்சகட்டத்தை எட்டும்போது நிலைமை மேலும் சிக்கலாகும். எனவே, நெல் வரத்து அதிகமாக உள்ள இடங்களில் கூடுதலாக கொள்முதல் நிலையங்களைத் திறக்க உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

    கொள்முதல் தாமதமடைவதால்  காய வைப்பது, அள்ளுவது உள்ளிட்ட வேலைகளுக்கு விவசாயிகளே தொழிலாளா்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.  இதற்கு ஒரு தொழிலாளிக்கு நாள்தோறும் உணவு, பலகாரம் உள்பட ரூ. 800 செலவாகிறது. குறைந்தது 4 நாள்களுக்கு 10 தொழிலாளா்கள் தேவைப்படும் நிலையில்இ இதற்கே பெருந்தொகை செலவிட வேண்டிய நிலை உள்ளது எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

    இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நா. உமாமகேஸ்வரி கருத்து தெரிவிக்கும்போது:

    மாவட்டத்தில் இதுவரை 456 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 72 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தொடா் மழையால் கொள்முதல் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை முதல் மீண்டும் கொள்முதல் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் சனிக்கிழமை 3 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. மழை நின்றுவிட்டதால்இ இனிமேல் நாள்தோறும் ஒவ்வொரு நிலையத்திலும் ஆயிரம் மூட்டைகள் வீதம் மாவட்டத்தில் 10 ஆயிரம் டன் கொள்முதல் என்ற இலக்கை எட்டுவோம். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை தேக்கமில்லாமல் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரித்தார்.

    Leave A Comment