• Login / Register
  • மேலும்

    விண்வெளியில் புவிகாந்தப் புயல் தாக்குதல் : 40 செயற்கைக் கோள்கள் சேதம்

    எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டார் லிங்க் இணைய சேவை நிறுவனம் அதிவேக இண்டர்நெட் சேவைகளை வழங்கி வருகிறது.

    இந்த அதிவேக இணைய சேவைக்காக , ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் 49 செயற்கை கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
     
    கடந்த 4ஆம் தேதி புவியின் வளிமண்டலத்தின் மேற்பரப்பில் மின்காந்த புயல் உருவானது.
     
    இந்த புயலின் தாக்கத்தினால் சுற்றுப்பாதையில் உள்ள செயற்கை கோள்கள் மீது இழுவை திறன் அதிகரித்தது. 

    இதனால், ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு சொந்தமான 49 செயற்கை கோள்களில், 40 செயற்கை கோள்கள் பாதிக்கப்பட்டு சேதமடைந்தன.
     
    இந்த சேதம் குறித்து , ஸ்டார் லிங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,

    புவிகாந்த புயலின் தாக்கத்தினால் மற்ற செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளது.
     
    மேலும், சேதமடைந்த 40 செயற்கை கோள்களும் பூமியில் விழும் அபாயம் நேராது எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

    Leave A Comment