• Login / Register
  • மேலும்

    சர்க்கரை அளவு குறைவாக உள்ள பழம் எது தெரியுமா? பழங்களின் சர்க்கரை அளவு..

    பொதுவாக பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியம் நிறைந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். பழங்களில் சர்க்கரை சத்து அதிகளவில் காணப்படுகிறது. அதே மாதிரி சில வகை பழங்களில் சர்க்கரை சத்து குறைவாக உள்ளன. எனவே சர்க்கரை சத்து எந்தளவில் எல்லா பழங்களிலும் காணப்படுகிறது என்று பார்க்கலாம்.

    வாழைப்பழத்தில் சுமார் 14 கிராம் அளவிற்கு சர்க்கரை சத்து காணப்படுகிறது. காலை உணவுகளுடன் இதை சேர்த்து சாப்பிடலாம். இது உங்களுக்கு போதுமான ஆற்றலையும் நல்ல சீரண சக்தியையும் தர உதவுகிறது. இருப்பினும் இதில் சர்க்கரை சத்து இருப்பதால் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

    அவகேடா பழத்தில் 1.33 கிராம் அளவிற்கு சர்க்கரை காணப்படுகிறது. இந்த அவகேடா பழத்தில் நல்ல கொழுப்புகள் உள்ளன. இதை நீங்கள் சாலட் மற்றும் டோஸ்டில் வைத்து சாப்பிடலாம். சர்க்கரை குறைவாக இருக்கும் போதும் அதிக கலோரிகளைக் கொண்டு இருக்கின்றன.



    மாம்பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இதில் இயற்கையாகவே நிறைய விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது. இயற்கையாகவே இதில் இயற்கை சர்க்கரையும் அதிகம். ஒரு மாம்பழத்தில் கிட்டத்தட்ட 45 கிராம் அளவிற்கு சர்க்கரை சத்து காணப்படுகிறது. எனவே மாம்பழத்தை எடுக்கும் போது எவ்வளவு சர்க்கரை அளவை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.

    ஒரு கப் திராட்சையில் கிட்டத்தட்ட 23 கிராம் அளவிற்கு சர்க்கரை சத்து காணப்படுகிறது. இது உங்களுக்கு நிறைய நன்மைகளை தரும். கோடைகாலத்தில் நீர்ச்சத்தை பெற திராட்சை சிறந்த ஒன்றாகும். திராட்சை அதிகமாக சாப்பிடுவதால் சரும ஆரோக்கியம் கிடைக்கும். குறிப்பாக, சூரியனின் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தைத் தடுத்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

    செர்ரி இனிமையானவை மட்டுமல்ல சர்க்கரை நிறைந்ததும் கூட. 1 கப் செர்ரியில் 18 கிராம் அளவிற்கு சர்க்கரை சத்து காணப்படுகிறது. ஒரு பெரிய பெளல் எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். இதை நீங்கள் ஸ்நாக்ஸ் ஆக கூட பயன்படுத்தி வரலாம்.



    ஒரு நடுத்தர வடிவ பேரிக்காயில் 17 கிராம் அளவிற்கு சர்க்கரை சத்து காணப்படுகிறது. நீங்கள் தயாரிக்கும் குறைந்த கொழுப்பு யோகார்ட்டில் அல்லது சாலட்டில் பேரிக்காய் துண்டுகளை சேர்க்கலாம்.

    கோடை காலத்தில் நம் தாகத்தை தணிக்க வரும் பழங்களில் தர்பூசணியும் ஒன்று. தர்பூசணியில் கிட்டத்தட்ட 17 கிராம் அளவிற்கு சர்க்கரை சத்து காணப்படுகிறது. இதில் ஏராளமான தண்ணீர் சத்து, எலக்ட்ரோலைட்டுகள் போன்றவை காணப்படுகிறது.

    நடுத்தர வடிவிலான அத்திப் பழத்தில் சுமார் 16 கிராம் அளவிற்கு சர்க்கரை சத்து காணப்படுகிறது. சீஸூடன் இந்த அத்திப்பழத்தை வெட்டி சேர்த்து சாப்பிடலாம். உங்களுக்கு மிதமான சர்க்கரை அளவு போதும் என்றால் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

    கொய்யாப்பழத்தில் குறைவான சர்க்கரையே காணப்படுகிறது. 5 கிராம் சர்க்கரை, 3 கிராம் நார்ச்சத்துக்கள் போன்றவை காணப்படுகிறது. எனவே உங்க ஸ்மூத்திகளில் கொய்யாப்பழத்தை பயன்படுத்தி வரலாம்.



    ஒரு கப் ராஸ்பெர்ரியில் 8 கிராம் அளவிற்கு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது செரிமானத்திற்கு நல்லதோடு குறைவான கலோரிகளோடு வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.

    முலாம் பழத்தில் 5 கிராம் சர்க்கரை மற்றும் 23 கலோரி கள் உள்ளன. இதனுடன் காட்டேஜெ சீஸ் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட்டு வரலாம். அதிலும் கோடை காலத்தில் இந்த முலாம் பழத்தை நிறைய எடுத்துக் கொள்ளலாம். இது கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை நிறைவு செய்யும்.

    ஒரு சிறிய பப்பாளி பழத்தில் 6 கிராம் அளவிற்கு சர்க்கரை சத்து காணப்படுகிறது. இந்த பழத்தை நீங்கள் அப்படியே அல்லது சாலட் மாதிரி கூட சாப்பிடலாம். யோகார்ட் போன்றவற்றுடன் கூட எடுத்துக் கொள்ளலாம்.

    ஒரு கப் முழு ஸ்ட்ராபெர்ரியில் 7 கிராம் அளவிற்கு மட்டுமே சர்க்கரை காணப்படுகிறது. எனவே சர்க்கரை குறைவாக இருப்பதால் இதை எல்லோரும் எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பழம் என்பதால், தாராளமாகக் கொடுக்கலாம். சர்க்கரை அளவு மிகமிகக் குறைவு. வைட்டமின் சி நிறைவாகக் கொண்ட பழமும் கூட. உடலுக்கு ஆற்றலையும் நோயெதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.



    Leave A Comment