• Login / Register
  • மேலும்

    சமையலில் கடுகை ஏன் சேர்க்க வேண்டும்?

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுனு சொல்வார்கள், சிலர்  கடுகை தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள், சிலர் கடுகு ஆயிலைத்தான் அதிகம் உபயோகிக்கிறார்கள்.

    கடுகில் வெண்கடுகு-கருங்கடுகு என்று 2 வகை இருக்கு. நம்ம சமையல்ல பயன்படுத்துற கடுகு கருங்கடுகு. அதுல வெண்கடுக விட காரம் அதிகமா இருக்கும். 

    கடுகு ஓராண்டு மட்டுமே உயிர்வாழும் செடி வகையைச் சேர்ந்த தாவரம். 1 மீ. உயரம் வரை வளரும். பூக்கள் நுனியில் கொத்தாக அமைந்தவை, மஞ்சள் நிறமானவை. விதைகள் கடுகு எனப்படுபவை. கடுகில் இருந்து பெறப்படுவது கடுகு எண்ணெய் ஆகும். 



    கடுகை ஏன் உணவில் சேர்க்கிறோம் அதன் நன்மைகள் என்ன என்று இங்கு பார்க்கலாம்.

    • கடுகு காரச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. குன்மம், வாதநோய் ஆகியவைகளைக் குணமாக்கும்; ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்தும்; சிறுநீர் பெருக்கும்; விஷத்தை முறிக்கும்.

    • கடுகு பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகளை அழிக்கும் மருத்துவக் குணம் உடையது, எனவே கடுகை ஊறுகாய், தொக்கு போன்றவற்றிலும் சேர்க்கிறார்கள். இதனால், இவை கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படும்.

    • கடுகு எண்ணெய் நெடியும் விறுவிறுப்பும் கொண்டதாகும். தோல் நோய்களைக் குணமாக்கும்.

    • சமையல் கடுகு மளிகைக் கடைகளில் சாதாரணமாகக் கிடைப்பதாகும். நம் அனைவருக்கும் நன்கு பழக்கமானதாகும். கடுகு எண்ணெய் மற்றும் வெள்ளைக் கடுகு ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

    • தேவையான அளவு கடுகை, அரைத்து தேனுடன் சேர்த்து பசையாகச் செய்து, கட்டிகளின் மீது பூச கட்டிகள் உடையும்.

    • ஒரு தேக்கரண்டி கடுகை, நீர் சேர்த்து அரைத்து, குடிக்கக் கொடுத்தால் வாந்தியுண்டாகும்; குடிபோதை மாறும்.

    • கிரந்திப்புண், தோல் நோய்கள் குணமாக கடுகு எண்ணெய்யை பாதிக்கப்பட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும்.


    • வெள்ளைக்கடுகு காரச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை. குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்களைப் போக்கும்; முடக்குவாத நோயைக் கட்டுப்படுத்தும்.

    • வெள்ளைக்கடுகு பூச்சிக் கடி விஷத்தைக் குறைக்கும். விஷத்தை உட்கொண்டவர்களுக்கு வெள்ளைக்கடுகை நீரில் ஊற வைத்து, நெல்லிக்காய் அளவு அரைத்துக் கொடுக்க, குமட்டல் இன்றி வாந்தியை உண்டாக்கி நஞ்சை வெளியேற்றும்.

    • வெள்ளைக்கடுகை அரைத்து, பருத்தித் துணியில் தடவி, கீல்வாயு, ரத்தக்கட்டு உள்ள இடங்களில் பற்றாகப் போட அவை குணமாகும்.

    • சிகால் தேக்கரண்டி அளவு வெள்ளைக் கடுகைத் தூளாக்கி, தேனில் குழைத்து உள்ளுக்குள் சாப்பிட இரைப்பு, இருமல், சுவாச நோய்கள் குணமாகும்.



    Leave A Comment