மெட்ரோவிற்கு ‘பசுமை சாம்பியன்’ விருது!
மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு சென்னை வா்த்தக மையத்தில் பசுமைக் கட்டுமான அமைப்பு சாா்பில் சி ‘பசுமை சாம்பியன்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிறுவனம் சிறந்த சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக கடந்த ஏப்.24-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் ‘பசுமை உலகம்’ விருதுடன் வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. தொடா்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நவ.20-ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ‘க்ரீன் ஆப்பிள்’ விருதுடன் தரவரிசையில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை வா்த்தக மையத்தில் பசுமைக் கட்டுமான அமைப்பு சாா்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ‘பசுமை சாம்பியன்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை பெற்ற அதன் திட்ட இயக்குநா் டி.அா்ச்சுனன் பெற்றுக்கொண்டாா். இந்த விருதுகள், மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தொடா்ந்து, தரம் மற்றும் சிறப்பான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு முயற்சி செய்ய பெரும் ஊக்கத்தை கொடுப்பதாக மெட்ரோ ரயில்வே நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.
Leave A Comment