• Login / Register
  • மேலும்

    கர்பப்பை நீர்க்கட்டி: தவிர்க்க வேண்டிய, எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

    பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று கருப்பை நீர்கட்டி ( ovarian cyst) பிரச்சனை. 

    கருப்பை நீர்க்கட்டி என்பது உங்கள் கருப்பையில் அல்லது அதன் மேற்பரப்பில் உள்ள ஒரு திடமான அல்லது திரவத்தால் நிரப்பப்பட்ட சிறு கட்டிகள் ஆகும். பெண்களுக்கு இரு சூலகங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் கருப்பையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பாதாம் வடிவ அளவில் உள்ளன. 

    இந்த கருப்பையில் முட்டைகள் உருவாகின்றன மற்றும் உங்கள் மாதாந்திர சுழற்சிகளின் போது வெளியிடப்படுகின்றன.

    பல பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் கருப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான கருப்பை நீர்க்கட்டிகள் மிகவும் சிறிய அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் பொதுவாக எந்த சிகிச்சையும் இல்லாமல் சில மாதங்களில் மறைந்துவிடும். இருப்பினும், கருப்பை நீர்க்கட்டி சிதைந்தால், அது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

    பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயும் இந்த நீர்க்கட்டியும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. இந்த கர்பப்பை நீர்க்கட்டிகளை சாதாரணமாக எடுத்துக் கொண்டு சிகிச்சை எடுக்காமல் இருந்தால் இது குழந்தையின்மைக்கு வழி வகுக்கும்.

    கர்பப்பை நீர்க்கட்டி ஏற்படுவதற்கான அறிகுறிகள்:

    கர்பப்பை நீர்க்கட்டிகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஒவ்வொரு பெண்களுக்கும் வேறுபடும். பெரும்பாலானோருக்கு ஏற்படும் அறிகுறி சரியாக மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது தான். அதாவது முறையற்ற பீரியட்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கலாம். கர்பப்பை நீர்க்கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண் ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஆன்றோஜென் அதிகம் சுரக்கும்.



    ஆன்றோஜென் அதிகம் சுரப்பதால் பெண்களுக்கு முகத்தில் ரோமம் வளரும். பெண்களுக்கு மார்பகத்தின் அளவு குறையும். முடிகொட்டும் பிரச்சினை ஏற்படும். குரலில் வேறுபாடு ஏற்படுகின்றது. முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுகின்றது. உடல் எடை அதிகரிக்கின்றது. மனஅழுத்தம் ஏற்படும், மலட்டுத் தன்மை ஏற்படுகின்றது. இவ்வாறான அறிகுறிகள் தென்படும்போது மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது.


    இந்த கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினையை சரி செய்வதற்கு இந்த பதிவில் பெண்கள் என்னென்ன உணவுப் பொருள்களை சாப்பிட வேண்டும் என்று இனி பார்க்கலாம்.

    வெந்தயம் - கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் வெந்தயத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது கர்பப்பை நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு இன்சுலின் அளவு அதிகமாக சுரக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கக் கூடும். இதை தடுக்க வெந்தயத்தை பயன்படுத்தலாம். அதாவது வெந்தயத்தை ஒரு நாள் முன்பு இரவு ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடவேண்டும். மேலும் மதியம் உணவு சாப்பிடுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பும், இரவு உணவு சாப்பிடுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பும் சாப்பிட வேண்டும். வெந்தயத்தை சாப்பிடும் பொழுது இன்சுலின் சுரப்பது கட்டுப்படுத்தப்படுகிறது.

    துளசி - கர்பப்பை நீர்க்கட்டி உள்ள பெண்கள் துளசி இலையை சாப்பிட வேண்டும். நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆன்றோஜென் என்று அழைக்கப்படும் ஆண் ஹார்மோன் அதிகம் சுரக்கும். எட்டு துளசி இலைகளை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிடுவதால் இந்த துளசி ஆன்றோஜென் ஹார்மோன் அளவையும் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.

    ஆளி விதைகள் - ஆளி விதைகளையும் இந்த கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினைக்கு தீர்வாக சாப்பிடலாம். ஆளி விதைகளில் ஒமேகா சத்துக்கள் உள்ளது. மேலும் புரதச்சத்துக்களும் நிரம்பி உள்ளது. இதனால் இந்த ஆளி விதைகள் உடலில் உள்ள குளுக்கோஸ் பயன்பாட்டிற்கு உதவுகின்றது. ஆளி விதைகளை பொடி செய்து நீரில் கலந்தோ இல்லது பழச்சாறில் கழந்தோ குடிக்கலாம். இதனால் உடல் பருமனும் குறைகின்றது.



    லவங்கப் பட்டை - கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் லவங்கப் பட்டையையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். லவங்கப் பட்டையை பொடி செய்து காலையில் குடிக்கும் டீ அல்லது காபியில் சிறிது கலந்து குடிக்கலாம். அல்லது தயிர் அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம். லவங்கப் பட்டையும் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றது. லவங்கப் பட்டையையும் கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினைக்கு தீர்வாக சாப்பிடலாம்.

    பாகற்காய் - கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் கசப்பு மிகுந்த பாகற்காயையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காயை வாரத்தில் ஐந்து முறை சமைத்து உண்ண வேண்டும். பாகற்காயை சாப்பிடுவதால் இன்சுலின் அளவு கட்டுக்குள் வருகின்றது. இன்சுலின் கட்டுக்குள் இருப்பதால் ஆன்றோஜென் ஹார்மோன் அளவும் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது.

    நெல்லிக்காய் - கர்பப்பை நீர்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் நெல்லிக்காயை சாப்பிடலாம். நெல்லிக்காய் உடலில் இன்சுலின் அளவு சுர்ப்பதை கட்டுக்குள் வைத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. நெல்லிக்காய் சாற்றை இளஞ்சூடான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் இன்சுலின் அளவு குறைவதோடு உடல் எடையும் குறைகின்றது.

    தேன் - கர்பப்பை நீர்ககட்டி பிரச்சினை உள்ள பெண்கள் தேனை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைக்கலாம். உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைத்தால் கர்பப்பை நீர்க்கட்டிகள் தானாக கரைந்து விடுகின்றது. காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் தேனையும் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து தினமும் குடிக்க வேண்டும். இதனால் உடல் எடை குறையும். உடல் எடை குறைந்தால் கர்பப்பை நீர்க்கட்டி கரைந்து விடும்.



    உளுந்து - கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் உளுந்தை தினசரி உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருப்பு உளுந்து சாதத்தை சாப்பிடுவது ஹார்மோன்களை சீராக்கி பெண்களுக்கு ஏற்படும் பிசிஓடி பிரச்சினையை சரிசெய்ய உதவுகின்றது. மேலும் பூண்டு குழம்பு, எள்ளுத் துவையல் போன்றவற்றை சாப்பிடுவதால் ஹார்மோன்கள் சீராக்கப்பட்டு பிசிஓடி பிரச்சினை சரி செய்யப்படுகின்றது. சூடான சாதத்தில் வெந்தயப் பொடி ஒரு ஸ்பூன் அளவு போட்டு சாப்பிடுவது நல்லது.

    கற்றாழை - மாதவிடாய் காலத்தில் வயிறு வலி அதிகம் உள்ள பெண்கள் கற்றாழையில் இருக்கும் ஜெல்லை தொடர்ந்து இரண்டு மாதம் சாப்பிட்டு வந்தால் வயிறு வலி குறைவதோடு கர்பப்பை நீர்கட்டிகள் உருவாமல் தடுக்கப்படுகின்றது.

    சின்ன வெங்காயம் - கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் சிறிய வெங்காயத்தை உணவில் அதிகம் சேரத்துக் கொள்ள வேண்டும். தினசரி உணவில் 50 கிராம் அளவு சிறிய வெங்காயத்தை சேரத்துக் கொள்வதால் பிசிஓடி பிரச்சினை சரியாகின்றது.

    கீரை வகைகள் - கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் தினமும் ஏதாவதொரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக முருங்கை கீரை, பசலைக் கீரை, அரைக் கீரை இவைகளில் ஏதேனும் ஒன்றை தினமும் சமைத்து சாப்பிட வேண்டும். மகப்பேறுக்கு ஏங்கும் பெண்களாக நீங்கள் இருந்தால் மேற்சொன்ன கிரைகளை பசு நெய் மற்றும் பாசிப்பயிறு கலந்து சாப்பிட வேண்டும்.

    முருங்கை - கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினையை குறைக்க முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, முருங்கை விதைகள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முருங்கை பிசின், சாரைப் பருப்பு இவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் ஓட்ஸ், திணை, முளைக்கீரை போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தவிர்க்க வேண்டிய உணவுகள் - கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுத்த உணவுகளை சாப்பிடக்கூடாது. உருளைக்கிழங்கு, வெள்ளை சர்க்கரை, அரிசி, பாஸ்தா போன்ற கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது.



    Leave A Comment