இந்த 07 பழங்களை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க கூடாதாம்!
உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கற்றுவது பழங்கள். பழ வகைகள் உடலுக்கு ஆற்றலையும், சத்துக்களையும் வழங்கக் கூடியவை. என்றாலும் சில பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் சில உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம். எந்த பழங்களை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிக்க கூடாது என பார்க்கலாம்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு ஆகியவை அதிகம். அதனால் இதை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கும்போது இந்த ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உடல் உறிஞ்சிக் கொள்ள முடியாமல் போகும். அதனால் ஊட்டச்சத்துக்கள் உடலுக்குக் கிடைக்காமல் போகும்.
பொதுவாகவே வாட்டர்மெலன் சாப்பிடுவதே தாகத்தைத் தீர்ப்பதற்காகத் தான். உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கத் தான் 90 சதவீதம் தண்ணீர் இருக்கிற பழமான தர்பூசணியை சாப்பிடுகிறோம். ஆனால் சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் அடுத்து தண்ணீர் குடிக்கத் தோன்றும். அதனால் வாட்டர்மெலன் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கத் தோன்றினாலும் குடிக்காதீர்கள்.வாட்டர்மெலன் சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் அது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு வயறு வீக்கம் மற்றும் உப்பசத்தையும் உண்டாக்கும்.

ஆரஞ்சு, எலுமிச்சை பழங்களில் அமிலத்தன்மை அதிகம் உள்ளதால் அவற்றை சாப்பிட்டு உடனே தண்ணீர் குடித்தால் நெஞ்சு எரிச்சல் பிரச்சினை ஏற்படலாம்.
ஆப்பிளில் உள்ள பெக்டின் என்ற பொருள் உடனே தண்ணீர் குடிப்பதால் வயிற்றை மந்தமாக்குகிறது.
மாம்பழம் சாப்பிட்டவுடனேயே தண்ணீர் குடிக்கக் கூடாது. ஏனெனில் அதிலுள்ள வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உடலுக்குக் கிடைக்காமல் போகும்.மற்றொரு காரணம் மாம்பழத்தில் உள்ள சில நொதிகள் நம்முடைய செரிமான ஆற்றலின் வேகத்தைக் குறைத்து அஜீரணத்தை ஏற்படுத்தக்கூடும்.

பப்பாளி இலை முதல் பழம் வரை நிறைய மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது. பப்பாளி பழத்தில் பபைன் என்னும் ஒருவகை என்சைம் இருக்கிறது. இது செரிமானம் அடைய சிறிது நேரம் எடுக்கும். நாம் உடனடியாக தண்ணீர் குடிக்கும்போது அது சில சமயங்களில் வயிறு வீக்கம் மற்றும் வயிறு மந்தத்தை ஏற்படுத்தும். அதனால் பப்பாளி சாப்பிட்டதண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது
அன்னாசி பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் நாக்கு சுறுசுறுவென்று பிடிக்கும். அதனால் பொதுவாகவே தண்ணீர் குடிக்க மாட்டோம். ஆனால் நிறைய பேருக்கு அது தெரியாமல் குடித்து விடுவார்கள். அப்படி குடிக்கும்போது அதிலுள்ள ப்ரோமெலனின் என்னும் நொதிகள் வயிற்றுப் போக்கையும் வயிற்று வலியையும் உண்டாக்கக் கூடும்.
Leave A Comment