இந்த நூற்றாண்டின் பறவை எது தெரியுமா?
இந்த நூற்றாண்டின் பறவையாக புயூட்கெடெக் என்ற பறவை தேர்தெடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டில் சுற்றுச்சூழலை காப்பதில் முன்னணியில் உள்ள காடுகள் மற்றும் பறவைகள் ஆர்வலர்களின் ஃபாரஸ்ட் அண்ட் பர்ட் (Forest and Bird) அமைப்பு, பர்ட் ஆஃப் தி செஞ்சுரி (Bird of the Century) என்ற பெயரில், "நூற்றாண்டிற்கான பறவை" எது என்பதை தேர்ந்தெடுக்க ஒரு போட்டியை நடத்தி வருகிறது. பொதுமக்களில் பலரும், பறவைகள் ஆர்வலர்களும் இதில் பங்கு பெறுவது வழக்கம்.
இவ்வருடம் சுமார் 200 நாடுகளில் இருந்து பலர் பங்கு பெற்று 3.5 லட்சம் பேர் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். பங்கேற்றவர்களின் முடிவுகளில், இறுதியாக புயூட்கெடெக் (puteketeke) எனும் பறவை இந்த நூற்றாண்டிற்கான பறவை என தேர்வானது.
முதலிடம் பெற்ற இப்பறவை, ஆஸ்திரலேசியன் க்ரெஸ்டட் க்ரீப் (Australasian crested grebe) என்றும் கிரேட் க்ரெஸ்டட் க்ரீப் என்றும் அழைக்கப்படுகிறது.
"வாக்களிப்பில் ஆரம்பத்தில் இந்த பறவை பட்டியலில் பின் தங்கியிருந்தது. ஆனால், அதன் பிரத்யேக தோற்றமும், வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்ற குணாதிசயங்களும் வாக்காளர்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி, இதனை தேர்வு பட்டியலில் மெல்ல மெல்ல முன்னேற்றி இறுதியில் அதற்கே முதலிடம் கிடைத்தது. இப்போட்டியின் மூலமாக இப்பறவை மட்டுமின்றி, அரிதாகி வரும் பல பறவைகள் குறித்து விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது" என இந்த போட்டியை நடத்தும் ஃபாரஸ்ட் அண்ட் பர்ட் அமைப்பை சேர்ந்த நிகோலா டோகி தெரிவித்தார்.
ஏரிகளில் காணப்படும் பறவை வகைகளை சேர்ந்த புயூட்கெடெக், உலகில் தற்போது 3 ஆயிரத்திற்கும் கீழே உள்ளது. இப்பறவை, பதிவான வாக்குகளில் 2,90,374 வாக்குகளை பெற்று, பிரவுன் கீவி (brown kiwi) பறவையை இரண்டாம் இடத்துக்கு தள்ளியது.
அரிதாகி வரும் இவ்வகை பறவைகளை காக்க பல தன்னார்வலர்கள் நியூசிலாந்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave A Comment