10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மத்திய அரசு வேலை; விண்ணப்பிக்க 5 நாட்களே உள்ளன!
10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மத்திய அரசு வேலையில் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில் இன்னும் 5 நாட்களுக்குள் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வணிகம் செய்ய நேரடி முகவராக செயல்படும் வாய்ப்பு இதன் மூலம் ஏற்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சுய தொழில் புரிவோர், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் க.செந்தில்குமார் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வணிகம் செய்ய நேரடி முகவராக செயல்பட 18 வய துக்கு மேற்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப் பற்றோர், சுய தொழில் புரிவோர், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
நேரடி முகவராக தேர்ந்தெடுக்கப்படுவோர் செய்யும் வணிகத் திற்கேற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் படித்துக் கொண்டே நேரடி முகவராக செயல் பட்டு ஊக்கத்தொகை பெற முடியும்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரூ.5000/- மதிப்புடைய NSC / KVP சேமிப்புப் பத்திரக் கணக்கினை அஞ்சலகங்களில் தங்கள் பெயரில் தொடங்கி பிரசிடென் ஆப் இந்தியா என்ற பெயரில் ஈடு செய்து சமர்ப்பிக்க வேண்டும். தங் கள் உரிமம் முடியும் போது பத்திரம் திருப்பி தரப்படும்.
தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை தங்கள் பகுதிக்கு அரு கிலுள்ள தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் பெற்றுக் கொண்டு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர்,
திருநெல் வேலி கோட்டம்,
திருநெல்வேலி 627 002
என்ற முகவரிக்கு ஜூன் 6 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பித்தவர்கள் ஜூன் 7 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிய ளவில்
முதுநிலை அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம்,
பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் (இரண்டாவது மாடி),
பாளையங்கோட்டையில் நடைபெறவுள்ள நேர்காணலில் தேவையான சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு வளர்ச்சி அலுவலரை 7708538258 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
Leave A Comment