ஆஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!
அவுஸ்திரேலியாவில் காணப்படும் வேலை வாய்ப்பு வெற்றிடங்களுக்கு 3 வகையான விசா மூலம் இலங்கையர்களும் விண்ணப்பிக்க முடிவும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்ட தொழில் துறைகளில் காணப்படும் கடுமையான பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக புலம்பெயர்ந்தோரை அழைத்து வேலையில் அமர்த்தும் திட்டத்தின் கீழ் இலங்கையர்களும் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்ட தொழில் துறைகளில் காணப்படும் கடுமையான பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக திறமையான புலம்பெயர்ந்தோரை ஈர்ப்பதற்கான பிரச்சாரத்தை அவுஸ்திரேலியா அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) அறிக்கையின்படி,
ஆர்வமுள்ள இலங்கையர்கள் குறிப்பிட்ட இணையத்தளத்திற்கு வருகை தந்து உரிய வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் இணையதளத்தில் சென்று சம்பந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
REGISTER LINK —> https://www.smartmoveaustralia.gov.au
Leave A Comment